இஸ்ரேல்-ஹமாஸ் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு உலக தலைவர்கள் வரவேற்பு

#Israel #War #World #leader #Hamas #ceasefire
Prasu
5 hours ago
இஸ்ரேல்-ஹமாஸ் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு உலக தலைவர்கள் வரவேற்பு

இஸ்ரேல்-ஹமாஸ் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. 

பாலஸ்தீனிய கைதிகள் இஸ்ரேலிய பிணைக்கைதிகளை பரிமாற்றம் செய்ய இருதரப்பும் ஒப்புதல் தெரிவித்துள்ளது. இதன்மூலம் 15 மாதமாக நடந்து வரும் காசா போர் முடிவுக்கு வரும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே, இஸ்ரேல்-ஹமாஸ் ஆகியவை போர் நிறுத்தத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளது. பிணைக்கைதிகள் பரிமாற்றம் செய்யவும் ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது என அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார்.

மேலும், இஸ்ரேல்-ஹமாஸ் போர் நிறுத்த ஒப்பந்தமானது பல கட்டமாக நடைபெறும். ஜனவரி 19ம் தேதி அமலுக்கு வரும் இந்த ஒப்பந்தத்தின் முதல் 42 நாளில் 33 பிணைக்கைதிகளை ஹமாஸ் படைகள் விடுவிக்க உள்ளன என தெரிவித்தார்.

நவம்பர் மாதம் சாதனை வெற்றியைப் பதிவு செய்ததன் அடிப்படையிலேயே இந்த ஒப்பந்தம் சாத்தியமாகியுள்ளது என விரைவில் பதவியேற்க உள்ள டொனால்டு டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், இஸ்ரேல் ராணுவம் மற்றும் ஹமாஸ் அமைப்பினர் இடையே ஏற்பட்டுள்ள போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கு உலக தலைவர்கள் வரவேற்பு அளித்துள்ளனர்.

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அண்டோனியோ குட்டரெஸ், அமெரிக்க முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா மற்றும் இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் உள்ளிட்ட பலர் வரவேற்றுள்ளனர்.

மேலதிக செய்திகளை அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!