என்பிபி அரசாங்கமும் ஊழல் இலஞ்சத்துக்கு துணைபோனவர்களா? சுமந்திரன் கேள்வி

#SriLanka #M. A. Sumanthiran #NPP
Mayoorikka
1 month ago
என்பிபி அரசாங்கமும் ஊழல்  இலஞ்சத்துக்கு துணைபோனவர்களா? சுமந்திரன் கேள்வி

இலஞ்சத்தை ஒழிப்போம் பார் லைசன்ஸ் விவகாரத்தை வெளிப்படுத்துவோம் என்று வந்தவர்கள் இன்று வரை அதனை வெளிப்படுத்தவில்லை. இவர்களும் இலஞ்சத்துக்கு துணைபோனவர்களாகத் தான் பார்க்க முடியும் முன்னாள் பாராளுமன்ற உறுபரபினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் யாழ் வடமராட்சி ஊடக இல்லத்தில் நேற்று (16) ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்து கருத்துத் தெரிவித்தார்.

 உடுப்பிட்டி மதுபானசாலை ஏன் தொடர்ந்தும் இயங்க வேண்டும் என்பது தொடர்பில் வழக்கு சாட்சியமளிப்பு இடம்பெற்றுவருகிறது.

 நாட்டிலே அதிகரித்த மதுபானசாலைகள் தொடர்பில் பல பிரசினை எழுந்துள்ளது. அதிகரித்த மதுபான பாவனையால் நேற்றும் பருத்தித்துறை வாள்வெட்டு கத்திக் குத்து இடம்பெற்றுள்ளது. மன்னாரில் இன்று நீதிமன்றின் முன் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது இருவர் உயிரிழந்துள்ளனர். 

இவ்வாறான நிலை நாட்டிற்கு நல்லதல்ல. பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இலஞ்சமாக கடந்தகாலத்தில் பார் லைசன்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இலஞ்சத்தை ஒழிப்போம் பார் லைசன்ஸ் விவகாரத்தை வெளிப்படுத்துவோம் என்று வந்தவர்கள் இன்று வரை அதனை வெளிப்படுத்தவில்லை. இவர்களும் இலஞ்சத்துக்கு துணைபோனவர்களாகத் தான் பார்க்க முடியும். நாம் சவால் விடுகிறோம் முடிந்தால் பார் லைசன்ஸ் விவகாரத்தை உடன் வெளியிடுங்கள் இல்லையேல் தீங்களும் ஊழல்வாதிகள் தான்.

 இந்தியா அயலவர்கள் தினம், இலங்கை விடயம் சம்மந்தமாக தி.முக கனிமொழியுடன் சந்திப்பை நடத்தியிருந்தோம் மத்திய அரசில் தமழ் மக்கள் தொடர்பில் கரிசனை குறைந்துள்ளது. இலஙலகை தமிழர்கள் தீர்வு விடயத்தில் புதிய அரசியல் அமைப்பு உருவாக்கத்திற்கு மூன்று ஆண்டுகள் தேவை என்று கூறுகிறது. அவ்வாறு தேவையில்லை ஏற்கனவே இனங்கிக் கொண்ட விடயம் எனவே இவ்வளவு காலம் தேவையில்லை. காலத்தை இழுத்தடிப்பது அதை இல்லாமல் செய்வதற்கான ஒரு திட்டம். மீனவர்கள் தொடர்பிலானது.

 தமிழரசு தலைமை தொடர்பிலும் புதிய அரசியல் அமைப்புத் தொடர்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ச.சிறிதரன், செல்வம் அடைக்கலநாதன் பேசுவருகின்ற விடயம் மற்றும் நீதிமன்ற வழக்குகள் தொடர்பில் எதிர்வரும் 18ம் திகதி மத்திய குழு கூட்டத்தில் பேசி முடிவெடுப்போம். என்று எம். ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!