யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்த இந்திய உயர்ஸ்தானிகர்! பலருடன் சந்திப்பு
#India
#SriLanka
#Jaffna
Mayoorikka
9 hours ago
யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்த இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா அரசியல் பிரமுகர்களுடன் முக்கிய சந்திப்பில் ஈடுபட்டார்.
யாழ்ப்பாண நகரில் உள்ள தனியார் விடுதியில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை (17) இரவு விருந்துடன் இச்சந்திப்பு இடம்பெற்றது.
இந்த ஒன்றுகூடலில் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், வட மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், பாராளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கருணநாதன் இளங்குமரன், ஜெயச்சந்திரமூர்த்தி ரஜீவன், சிறீபவானந்தராஜா முதலானோர் கலந்துகொண்டனர்.
மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்