2500 பேருக்கு பொது மன்னிப்பு வழங்கிய அமெரிக்கா ஜனாதிபதி பைடன்

#America #President #Biden #prisoner
Prasu
4 hours ago
2500 பேருக்கு பொது மன்னிப்பு வழங்கிய அமெரிக்கா ஜனாதிபதி பைடன்

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் பதவிக் காலம் இன்னும் இரு நாள்களில் முடிவடையவுள்ளது.

இந்த நிலையில், சாதாரண போதைப் பொருள் குற்றங்களுக்காக சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட சுமாா் 2,500 பேருக்கு தனது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி அவா் பொதுமன்னிப்பு அளித்துள்ளாா்.

வன்முறைச் சம்பவங்களில் ஈடுபடாத நிலையிலும் மிகக் கடுமையான தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால் அவா்களுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்படுவதாக பைடன் கூறினாா்.

அமெரிக்க வரலாற்றில் ஜனாதிபதி ஒருவா் ஒரே நாளில் இத்தனை பேருக்கு பொதுமன்னிப்பு வழங்கியுள்ளது இதுவே முதல்முறையாகும் இதற்கு முன்னதாக, அமெரிக்காவின் மத்திய நீதிமன்றங்களால் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த 37 பேருக்கு அந்த தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்து ஜோ பைடன் கடந்த மாதம் உத்தரவிட்டார்.

அந்த குற்றவாளிகள் செய்த கொலைகளை வன்மையாகக் கண்டித்தாலும், மத்திய அளவில் மரண தண்டனை விதிக்கப்படுவது தவறு என்பதால் அவா்களுக்கான தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைப்பதாக அப்போது பைடன் கூறினார்.

மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!