இன்று முதல் அமுலாகும் காசா போர் நிறுத்தம்
இஸ்ரேல்-பாலஸ்தீனத்தின் காசாமுனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் இடையே கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் போர் நடந்து வருகிறது.
இதில் காசாவில் குழந்தைகள், பெண்கள் உள்பட 46 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.
இதற்கிடையே ஹமாசுடனான போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கு இஸ்ரேல் முழு மந்திரிசபை இன்று அதிகாலை ஒப்புதல் அளித்தது. இதையடுத்து இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தம் இன்று முதல் அமலுக்கு வருகிறது.
இந்த ஒப்பந்தம் 3 கட்டங்களாக அமல்படுத்தப்படுகிறது. 6 வார கால போர் நிறுத்தத்தின் முதல் கட்டத்தில், காசா மீதான தாக்குதல் நிறுத்தப்படும். இஸ்ரேலிய படைகள் காசாவின் பல பகுதிகளில்இருந்தும் பின்வாங்கும்.
ஹமாஸ் அமைப்பினரிடம் உள்ள 33 இஸ்ரேல் பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட உள்ளனர். அதேபோல் 735 பாலஸ்தீன கைதிகளை இஸ்ரேல் விடுவிக்க உள்ளது.
அதேபோல் ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ள விஷயங்கள் படிப்படியாக அமல்படுத்தப்படும். இதன்மூலம் காசா மீதான போர் 15 மாதங்களுக்கு பிறகு முடிவுக்கு வர உள்ளது.
மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்