பிரபல நாட்டில் 5 ஆண்டுகளுக்குப் பிறகு நிறைவேற்றப்பட்ட மரண தண்டனை
தைவான் நாட்டின் சான்சாங் மாவட்டத்தில் ஹுவாங் லின் காய் (32) என்பவர் கடந்த 2013ம் ஆண்டு தனது முன்னாள் காதலியையும் அவரது தாயையும் கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் கடந்த 2017ம் ஆண்டு ஹுவாங் லின் காய்க்கு மரண தண்டனை விதித்து உத்தரவிட்டது. அதனைத் தொடர்ந்து சட்ட அமைச்சர் செங் மிங்-சியென் மரண தண்டனையை நிறைவேற்றும் கோப்பில் கையெழுத்திட்டார்.
அதன்படி தைபே தடுப்பு மையத்தில் துப்பாக்கியால் சுட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஹுவாங் ஈடுபட்ட குற்றங்கள் கொடூரமானவை மற்றும் இரக்கமற்றவை. அவை மனிதாபிமானமற்றவை, மிகவும் கொடூரமானவை மற்றும் குற்றம் மிகவும் தீவிரமானது என்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட பின்னர் நீதித்துறை தெரிவித்துள்ளது.
மே 2024ல் ஜனாதிபதியாக லாய் சிங்-தே பதவியேற்ற பின் நிறைவேற்றப்படும் முதல் மரணதண்டனை இதுவாகும்.
2020 ஏப்ரல் 1ந்தேதிக்குப்பின் நிறைவேற்றப்படும் முதல் மரண தண்டனை இதுவாகும். 36 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதில் தற்போது ஹுவாங் லின் காய் தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்