அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

#SriLanka #Batticaloa #Ampara #Flood
Dhushanthini K
2 hours ago
அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் பல பகுதிகளில் சிறிய வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கான எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட நீர்ப்பாசனத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. 

 நேற்று (18) இரவு முதல் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் சில பகுதிகளில் பெய்த மழை காரணமாக இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

 இதன்படி, அம்பாறை மாவட்டத்தின் மகாஓயா பிரதேச செயலாளர் பிரிவு மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூரப்பற்று மற்றும் கோறளைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு உட்பட்ட முந்தேனி ஆறு படுகையின் தாழ்வான பகுதிகளில் சிறு வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் இருப்பதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்குள் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும்,  அந்தப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும், நீர்ப்பாசனத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!