கிழக்கு மாகாணத்தில் அமைந்துள்ள பாடசாலைகளுக்கு விடுமுறை!
#SriLanka
#School
Dhushanthini K
2 hours ago
இலங்கையில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு நாளைய (19.01) தினம் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
பாடசாலைகளில் இந்த நாட்களில் தேர்வு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அந்த தேர்வை பிறிதொரு தினத்தில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி வரும் சனிக்கிழமை அந்த தேர்வுகளை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.