கண்டியில் வீதியை விட்டு விலகி ஆற்றில் பாய்ந்த ஜீப் : இருவர் பலி!
#SriLanka
#Accident
Dhushanthini K
3 hours ago
கண்டி, பன்வில காவல் பிரிவின் பத்தேகம பகுதியில் பயணித்த ஒரு சூப்பர் ஜீப், சாலையை விட்டு விலகி ஆற்றில் பாய்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் இருவர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு பெண்ணும் ஒரு ஆணும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஜீப்பை ஓட்டிச் சென்ற நபர் காணாமல் போயுள்ளதாகவும் பன்வில பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மேலும், மற்றொரு பெண் காயமடைந்துள்ளார். சடலங்கள் பன்வில பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
விபத்தில் இறந்தவர்களில் ஒருவர் கண்டி, தல்வத்தையில் வசிக்கும் கட்டுமான ஒப்பந்ததாரர் என்று கூறப்படுகிறது.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பன்வில பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.