வல்வெட்டித்துறை பொலிஸாரால் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட நபர் உயிரிழப்பு

#SriLanka #Death #Police #Investigation
Prasu
8 hours ago
வல்வெட்டித்துறை பொலிஸாரால் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட நபர் உயிரிழப்பு

வல்வெட்டித்துறை பொலீஸாரால் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட குடும்பஸ்தர் பொலிஸ் காவலில் உயிரிழந்தமை அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.குறித்த சம்பவம் வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் நடைபெற்றுள்ளது. 

சம்பவத்தில் தீருவில் வல்வெட்டித்துறை பகுதியைச் சேர்ந்த சந்திரகுமார் சந்திரபாலன் (வயது 49) என்பவரே உயிரிழந்துள்ளார். குறித்த நபர் சனிக்கிழமை பருத்தித்துறை நகர் பகுதியில் மது போதையில் நின்றுள்ளார். 

குறித்த நபருக்கு பிடியாணை உள்ளதாக கூறி விசாரணை செய்ய வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். 

அதன் பின்னர் இரவு குறித்த நபர் உயிரிழந்த நிலையில் உடலம் வல்வெட்டித்துறை ஊரணி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு பிரேத பரிசோதனைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 

உடற்கூறு பரிசோதனையில் மேலதிக தகவல்கள் பெற வேண்டி உள்ளதால் சடலம் யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

உடலில் அடி காயங்கள் காணப்படுவதாகவும் இது பொலிஸாரின் தாக்குதலால் குறித்த நபர் உயிரிழந்திருக்கலாம் எனவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

பொதுமக்கள் நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இதனை பிரசுரிக்கிறது.

மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!