இந்த வருட ஆரம்பத்தில் அதிகரித்த டெங்கு நோய்: இருவர் உயிரிழப்பு

#SriLanka #Dengue
Mayoorikka
2 hours ago
இந்த வருட ஆரம்பத்தில் அதிகரித்த டெங்கு நோய்: இருவர் உயிரிழப்பு

வருடம் ஆரம்பித்து 20 நாட்களில் நாட்டில் 3,185 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

 அதன்படி, மேல்மாகாணத்தில் 1,442 நோயாளர்களும் தென் மாகாணத்தில் 374 நோயாளர்களும் கிழக்கு மாகாணத்தில் 312 நோயாளர்களும் மத்திய மாகாணத்தில் 281 நோயாளர்களும் பதிவாகியுள்ளனர்.

 குறிப்பாக மேல் மாகாணத்திலேயே அதிகளவான நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 மேலும், குறித்த காலகட்டத்தில் இருவர் டெங்கு நோயால் உயிரிழந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதற்கிடையில், கடந்த ஆண்டு நாட்டில் 49,887 டெங்கு நோயாளர்களும் 24 டெங்கு இறப்புகளும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!