கிளிநொச்சி - இராமநாதபுரம் பகுதியில் தங்க நகை கொள்ளை : சந்தேகநபரை காவலில் வைக்க உத்தரவு‘!
#SriLanka
#Court Order
#Kilinochchi
Thamilini
11 months ago
கிளிநொச்சி - இராமநாதபுரம் பகுதியில் கொள்ளையிடப்பட்ட தங்க நகைகளில் 08 பவுண் நகைகள் மீட்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 12 ஆம் திகதி மாயவனூர் பகுதியில் உள்ள வீடொன்றில் 12 அரை பவுண் நகைகள் கொள்ளையிடப்பட்டதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டது.
இதற்கமைய விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் சந்தேகநபரை கைது செய்ததுடன், 08 பவுண் நகையை மீட்டுள்ளனர். மிகுதி நகைகளை மீட்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இந்நிலையில் குறித்த சந்தேகநபர் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட நிலையில், அவரை 14 நாட்கள் தடுப்பு காவலில் வைக்க நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
பொதுமக்கள் நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இதனை பிரசுரிக்கிறது.
மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்