வடிவேலுவால் வாய்ப்பிழந்த நகைச்சுவை நடிகர் - போன் போட்டு மிரட்டிய விஜயகாந்த்!
பிரபல நகைச்சுவை நடிகரான வடிவேலு பற்றிய சில விமர்சனங்கள் அவர் பற்றிய எண்ணப்போக்கை மாற்றும் வகையில் அமைந்துள்ளது.
சில சிறிய நடிகர்கள் அவர் பற்றிய கருத்துக்களை பேசி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. அந்தவகையில் நடிகர் ஜெயமணி பேட்டி ஒன்றில் பகிர்ந்து கொண்டுள்ளார்.
இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர், விவேக் உடன் அவருக்கு இருந்த தொழில் போட்டியில், தன்னுடன் நடிக்கும் யாரோ ஒரு நகைச்சுவை நடிகர் விவேக்குடன் நடித்துவிட்டால், அவர்களை அதன் பின்னர் தான் நடிக்கும் படங்களில் சேர்த்துக் கொள்ள மாட்டாராம்.
இது மட்டும் இல்லாமல், அந்த நடிகர்களுக்கு வாய்ப்பு வழங்கக்கூடாது என தயாரிப்பு நிறுவனங்களிடமும் கூறிவிடுவாராம் வடிவேலு. இது தொடர்பாக பல்வேறு நகைச்சுவை நடிகர்கள் தெரிவித்துள்ளனர்.
வடிவேலுவால் பட வாய்ப்புகளை இழந்த நடிகர்கள் அப்போது நடிகர் சங்கத் தலைவராக இருந்த விஜயகாந்த்திடம் முறையிட்டு தங்களது பிரச்னையை சரி செய்து கொண்டுள்ளனர். வடிவேலுவால் பல தயாரிப்பாளர்களும் கூட பிரச்னைகளை எதிர் கொண்டுள்ளனர் என கூறப்படுகின்றது.
குறிப்பாக சுந்தரா டிராவல்ஸ் படத்தின் தயாரிப்பாளருக்கும் வடிவேலுக்கும் இடையில் பெரும் பிரச்னையே ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக தெரிந்து கொண்ட விஜயகாந்த் வடிவேலுவை அழைத்து மிரட்டிவிட்ட பின்னர்தான் வடிவேலு படத்தில் முறையாக நடித்துக் கொடுத்துள்ளார்.
இப்படியான நிலையில், நடிகர் ஜெயமணிக்கும் வடிவேலுவுக்கும் எதோ ஒரு சந்தர்ப்பத்தில் மனஸ்தாபம் ஏற்பட்டுள்ளது. அதன் பின்னர் ஜெயமணிக்கு தான் நடிக்கும் படங்களில் வாய்ப்பு கொடுக்காமல் இருந்தது மட்டும் இல்லாமல், அவரது குடும்பத்தினரையும் மிரட்டியுள்ளார்.
இப்படியான நிலையில், நடிகர் ஜெயமணி கேப்டன் விஜயகாந்தை படப்பிடிப்புத் தளத்தில் சந்தித்து நடந்ததைக் கூறியுள்ளார். உடனே வடிவேலுக்கு போன் போட்ட கேப்டன், வடிவேலுவின் உதவியாளரிடம், ”என்னடா ஓவரா ஆடுறீங்க? வடிவேலுவை ஒழுங்கா இருக்கச் சொல்லு.. தியாகராஜர் மாதிரி ஆகிடுவீங்க” என மிரட்டிவிட்டியுள்ளாராம்.
பொதுமக்கள் நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இதனை பிரசுரிக்கிறது.
மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்