இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு : மக்களின் கவனத்திற்கு!
#SriLanka
#weather
#Rain
Thamilini
11 months ago
நாட்டில் நிலவும் மழையுடன் கூடிய வானிலை இன்றும் (21.01) தொடரும் என வளிமண்டளவியல் திணைக்களம் எதிர்வுக்கூறியுள்ளது.
பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்றும் சில பகுதிகளில் 100 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும் முன்னுரைக்கப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை தவிர்த்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.