துருக்கியில் உள்ள ஹோட்டலில் தீ விபத்து - 10 பேர் பலி!
#SriLanka
#Accident
#fire
Dhushanthini K
2 months ago

துருக்கியில் உள்ள ஒரு ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர்.
மேலும் 32 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
11 மாடிகளைக் கொண்ட அந்த ஹோட்டலின் நான்காவது மாடியில் தீ விபத்து ஏற்பட்டது.
தீயை அணைக்க 30 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும், தற்போது தீ முற்றிலுமாக அணைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பொதுமக்கள் நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இதனை பிரசுரிக்கிறது.
மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்



