கண்டி-மஹியங்கனை வீதியை தற்காலிகமாக மூட நடவடிக்கை!
நிலவும் மோசமான வானிலை காரணமாக கண்டி-மஹியங்கனை வீதியை தற்காலிகமாக மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கண்டி-மஹியங்கனை சாலை கஹடகொல்ல பகுதியில் இருந்து தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக போலீசார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
அதன்படி, கண்டி மஹியங்கனை பிரதான வீதி, கண்டி பொலிஸ் பிரிவின் தன்னேகும்புர சந்தியிலிருந்தும், ஹசலக பொலிஸ் பிரிவின் பாலம் சந்தியிலிருந்தும் இன்று (22) மாலை 6 மணி முதல் நாளை (23) காலை 6 மணி வரை மூடப்படும்.
நிலவும் பாதகமான வானிலை காரணமாக, கஹடகொல்ல பகுதியில் இருந்து மண்சரிவு மற்றும் பாறைகள் சரிந்து விழும் அபாயம் உள்ளது. இதனால் இரவில் இந்த சாலையில் பயணிக்கும் வாகனங்கள் மற்றும் மக்களுக்கு கடுமையான ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடத்திய கலந்துரையாடலைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.
மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்