குடியுரிமை கொள்கையில் புதிய மாற்றத்தை கொண்டுவந்த ட்ரம்ப் - இந்தியர்களுக்கு பாதிப்பு!

#SriLanka #Trump #Indian #citizenship
Dhushanthini K
8 hours ago
குடியுரிமை கொள்கையில் புதிய மாற்றத்தை கொண்டுவந்த ட்ரம்ப் - இந்தியர்களுக்கு பாதிப்பு!

அமெரிக்காவின் 47 ஆவது ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் கடந்த 20 ஆம் திகதி பதவிப்பிரமாணம் செய்துக்கொண்டார். 

இந்நிலையில் அவர் ஆட்சிக்கு வந்த மறுகணமே பல சட்டத்திருத்தங்களில் கையெழுத்திட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். 

அந்தவகையில் அவர் கையெழுத்திட்ட முதலாவது கோப்பாக குடியுரிமை சட்டத்திருத்தம் காணப்படுகிறது. 

1868 ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் இருந்து வந்த பிறப்புரிமை அடிப்படையில் குடியுரிமை வழங்கும் திட்டத்தை அவர் இரத்து செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

இதன்மூலம் பல இந்தியர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சட்டத்திருத்தம் வரும் 30 நாட்களில் அமுலுக்கு வரவுள்ளது. 

பழைய சட்ட விதிகளின்படி அமெரிக்காவில், பெற்றோரின் குடியுரிமை அல்லது குடியேற்ற நிலை எப்படிப்பட்டதாக இருந்தாலும், அந்நாட்டு மண்ணில் பிறந்த குழந்தைக்கு தாமாக குடியுரிமை வழங்கப்பட்டு வருகிறது.

ஆனால் புதிய சட்டத்திருத்தத்தின்படி அமெரிக்காவில் பிறக்கும் குழந்தை குடியுரிமை பெற, குறைந்தபட்சம் ஒரு பெற்றோராவது அமெரிக்க குடிமகனாக, சட்டப்பூர்வ நிரந்தர குடியிருப்பாளராக   அல்லது அமெரிக்க ராணுவத்தில் உறுப்பினராக இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் தந்தை அமெரிக்க குடிமகனாக இல்லாவிட்டாலோ, சட்டப்பூர்வமான நிரந்தர குடியுரிமை இல்லாதவர் என்றாலோ அல்லது தாய் சட்டவிரோதமாக குடியேறியவர் அல்லது மாணவர், சுற்றுலா விசாவில் வந்திருப்பவர் என எப்படி இருந்தாலும் அவருக்கு பிறக்கும் குழந்தைக்கு தாமாக குடியுரிமை கிடைக்காது. 

இது, சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்கு மட்டுமே பொருந்தும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், எச்1பி விசா போன்ற சட்டப்பூர்வ குடியேற்றம் கொண்டவர்களுக்கும் பொருந்தும் என கூறப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.



பொதுமக்களுடைய நன்மை கருதி 
லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.

மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்



உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!