கேபிடல் கலவரம் - 1500 கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கிய ட்ரம்ப் நிர்வாகம்!
#SriLanka
#world_news
#Trump
Dhushanthini K
8 hours ago
அமெரிக்காவில் கெபிடல் கலவரம் தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்த பலருக்கு ட்ரம்ப் பொது மன்னிப்பு வழங்கியுள்ளார்.
கடந்த 2021ம் ஆண்டு அமெரிக்க நாடாளுமன்றத்தில் நடைபெற்ற கலவரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட தனது ஆதரவாளர்கள் சுமார் 1,500 பேருக்கு பொது மன்னிப்பு வழங்குவதாக டிரம்ப் அறிவித்தார்.
கடந்த 2020 ஆம் ஆண்டு இடம்பெற்ற தேர்தலில் ட்ரம்ப் தோல்வியை தழுவிய நிலையில் பைடன் ஆட்சிபீடம் ஏறினார்.
இந்நிலையில் ட்ரம்பின் ஆதரவாளர்கள் நாடாளுமன்றத்திற்குள் நுழைந்து தங்களது எதிர்ப்பை வெளியிடும் வகையில் கலவரத்தில் ஈடுபட்டிருந்தனர். இதன்போது ஆயிரக்கணக்கானவர்கள் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.
மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்