வாகன இறக்குமதி தொடர்பில் அமைச்சர் பாராளுமன்றத்தில் வெளியிட்டுள்ள தகவல்!
வாகன இறக்குமதிக்கு வழங்கப்பட்ட அனுமதிகளை இரத்து செய்ய அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக வெளியான தகவல்களை பொருளாதார மேம்பாட்டு பிரதி அமைச்சர் அனில் ஜெயந்த பெர்னாண்டோ மறுத்துள்ளார். இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
அனுமதிகள் மூலம் வாகனங்களை இறக்குமதி செய்வது இரத்து செய்யப்படவில்லை என்றும், ஆனால் இந்த ஆண்டு வாகனங்களை இறக்குமதி செய்வது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
வாகன அனுமதி சலுகையை இரத்து செய்யும் நிலையில், அரசாங்கம் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
வாகன அனுமதிகள் தொடர்பாக நிரந்தர முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை. அதே நேரத்தில், அதிகாரிகள் அல்லது தேவையான தகுதிகள் உள்ளவர்கள் சலுகைகளை இழக்கக்கூடாது.
முன்னைய அரசாங்க காலங்களில், இந்த சலுகைகள் வழங்கப்பட்டபோது, கடந்த காலத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளில் தவறான முடிவுகள் இருந்திருக்கலாம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தநிலையில், தரவுகளின்படி, சுமார் 15,000 முதல் 20,000 வரை அனுமதிகள் இதுவரை வழங்கப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் பெர்னாண்டோ கூறியுள்ளார்.
பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.
மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்