ஆனமடுவ – நவகத்தேகம வீதியில் ஏற்பட்ட விபத்தில் இளைஞர் ஒருவர் பலி
#SriLanka
#Death
#Accident
#Road
Prasu
11 months ago
ஆனமடுவ – நவகத்தேகம வீதியில் பம்மன்னேகம சந்திப்பில் மோட்டார் சைக்கிளும் வேனும் நேருக்கு நேர் மோதி விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் மற்றும் வேனின் சாரதி காயமடைந்து ஆனமடுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர், துரதிர்ஷ்டவசமாக மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞன் ஒருவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேன் சாரதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் ஆனமடுவ ஆரம்ப மருத்துவமனையில் இருந்து சலவத்த மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு, தற்போது அவர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.
மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்