மும்பை தாக்குதல் பயங்கரவாதியை இந்தியாவுக்கு நாடு கடத்த அமெரிக்கா அனுமதி

#India #Court Order #America #Terrorists
Prasu
2 months ago
மும்பை தாக்குதல் பயங்கரவாதியை இந்தியாவுக்கு நாடு கடத்த அமெரிக்கா அனுமதி

கடந்த 2008ம் ஆண்டு மும்பையில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 166 பேர் பலியானார்கள்.

இச்சம்பவத்தில் தொடர்புடைய பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்தவரும் கனடா குடியுரிமை பெற்றவருமான தஹாவூர் ராணா என்பவர், கடந்த 2009ம் ஆண்டு அமெரிக்க போலீசாரால் கைது செய்யப்பட்டார். 

அவர் மீது அமெரிக்க கோர்ட்டில் விசாரணை நடந்து வந்தது. இதற்கிடையே ராணாவை நாடு கடத்த இந்தியா கோரிக்கை விடுத்து மனு தாக்கல் செய்தது. இதையடுத்து லாஸ் ஏஞ்சல்சில் உள்ள அமெரிக்க மாவட்ட நீதிமன்றம் ராணாவை இந்தியாவுக்கு நாடு கடத்த அனுமதி அளித்தது.

இதை எதிர்த்து ராணா அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீது விசாரணை நடந்து வந்தது. இந்த நிலையில் ராணாவை இந்தியாவுக்கு நாடு கடத்த அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்துள்ளது. 

இந்த வழக்கில் ராணாவுக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு எதிரான மறு ஆய்வு மனுவை தள்ளுபடி செய்தது. இந்தியாவுக்கு நாடு கடத்தப்படாமல் இருக்க ராணாவின் கடைசி முயற்சியும் தோல்வி அடைந்தது.

அவர் விரைவில் இந்தியாவுக்கு அழைத்து வரப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது ராணா, லாஸ் ஏஞ்சல்சில் உள்ள பெரு நகர தடுப்பு மையத்தில் உள்ளார்.

பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.

மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!