தைவானில் 1.2 லட்சம் பச்சோந்திகளை கொல்ல அரசாங்கம் உத்தரவு

இதனால் 1.2 லட்சம் பச்சோந்திகளை கொல்லும் முடிவை தைவான் அரசு அறிவித்துள்ளது. தைவானின் வனவியல் மற்றும் இயற்கை பாதுகாப்பு அமைப்பின் கூற்றுப்படி, தீவின் தெற்கு மற்றும் மத்திய பகுதிகளில் சுமார் 2,00,000 பெரியவகை பச்சோந்திகள் இருக்கின்றன.
கடந்த ஆண்டு சுமார் 70,000 பெரியவகை பச்சோந்திகளை சிறப்பு வேட்டை குழுவினர் கொன்றனர். ஒரு பச்சோந்தியை கொல்வதற்கு தலா 15 டாலர்கள் [ 1300 ரூபாய் ] அவர்களுக்கு சன்மானமாக வழங்கப்பட்டது.
இந்நிலையில் இந்த ஆண்டு 1.2 லட்சம் பச்சோந்திகளைக் கொல்ல தைவான் அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இவ்வகை பச்சோந்திகள் வாழும் கூடுகளை இனங்காண உள்ளூர் மக்கள் உதவ வேண்டும் என்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பெரியவகை பெண் பச்சோந்திகள் ஒரே நேரத்தில் 80 முட்டைகள் வரை இடும். அவை 20 ஆண்டுகள் வரை வாழும். சுமார் 5 கிலோகிராம் வரை எடை கொண்டிருக்கும்.
தற்போது 1.2 லட்சம் பச்சோந்திகளைக் கொல்ல அரசு முடிவெடுத்துள்ள நிலையில் மீன்பிடி ஈட்டிகளைப் பயன்படுத்துவது அவற்றை கொல்ல மிகவும் 'மனிதாபிமான வழி' என்று கூறியுள்ளது.
பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.
மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்



