சுதந்திர சதுக்கத்தை அண்மித்த பகுதிகளில் விசேட போக்குவரத்து திட்டம்

#SriLanka #Colombo
Mayoorikka
11 months ago
சுதந்திர சதுக்கத்தை அண்மித்த பகுதிகளில் விசேட போக்குவரத்து திட்டம்

இலங்கையின் சுதந்திர தின கொண்டாட்ட ஒத்திகைகள் காரணமாகச் சுதந்திர சதுக்கத்தை அண்மித்த பகுதிகளில் விசேட போக்குவரத்துத் திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது. 

 குறித்த பகுதியில் எதிர்வரும் 29 ஆம் திகதி முதல் பெப்ரவரி மாதம் 2 ஆம் திகதி வரை காலை 6 மணி முதல் நண்பகல் 12 மணி வரை இந்த விசேட போக்குவரத்துத் திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் போக்குவரத்துப் பிரிவு தெரிவித்துள்ளது.

 இதன்படி, கருவாத்தோட்டம் - விஜேராம மாவத்தையிலிருந்து வித்யா மாவத்தைக்கான நுழைவாயில், பௌத்தாலோக மாவத்தையிலிருந்து மைட்லேண்ட் பிளேஸுக்கான நுழைவாயில், ஸ்டான்லி விஜேசுந்தர மாவத்தையிலிருந்து இலங்கை மன்ற கல்லூரி வீதிக்கான நுழைவாயில் ஆகியன தற்காலிகமாக மூடப்படவுள்ளன. 

 அத்துடன் ஒத்திகை காலத்தில் ஹோட்டன் பிளேஸில் இருந்து சுதந்திர சதுக்கம் ஊடாக மைட்லேண்ட் பிளேஸுக்கான நுழைவாயில் மூடப்படும் என தெரிவித்துள்ளது. அந்தப் பகுதியில் உள்ள அரச மற்றும் தனியார் நிறுவனங்களுக்குப் பிரவேசிக்கும் வாகனங்கள் ஒத்திகையினை பாதிக்காத வகையில் பயணிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது

பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.

மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!