முக்கிய சபை ஒன்றின் தலைவர் திடீர் இராஜினாமா!
#SriLanka
Mayoorikka
11 months ago
இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் ரமால் சிறிவர்தன தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இராஜினாமாவை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குமார குணசேன உறுதிப்படுத்தியுள்ளார்.
அரச நிறுவனமொன்றில் தற்போதைய அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட தலைவர் ஒருவர், ஏறக்குறைய ஒரு மாதத்திற்குள் இராஜினாமா செய்த இரண்டாவது சந்தர்ப்பம் இதுவாகும்.
முன்னதாக, இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் தலைவர் செனேஷ் திஸாநாயக்கவும் தனது பதவியை இராஜினாமா செய்தார்.
பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.
மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்