ஹர்ஷ இலுக்பிட்டியவின் பிணை விண்ணப்பம் நிராகரிப்பு!
#SriLanka
#Court Order
Thamilini
11 months ago
நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் ஹர்ஷ இலுக்பிட்டியவின் பிணை விண்ணப்பத்தை காலவரையின்றி ஒத்திவைக்க உச்ச நீதிமன்றம் முடிவு செய்துள்ளது.
ஹர்ஷ இலுக்பிட்டியவின் வழக்கறிஞர்கள் முன்வைத்த வாதங்களை பரிசீலித்த பின்னர், பிரீதி பத்மன் சூரசேன தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்தது.
இருப்பினும், நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டுகள் மீதான விசாரணையை மே 8 ஆம் திகதி நடத்த நீதிபதிகள் அமர்வு நிர்ணயித்துள்ளது.
பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.
மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்