தென்கொரியாவில் புறப்படும் தருவாயில் தீப்பிடித்து எரிந்த விமானம்!

தென் கொரியாவில் ஓடுபாதையில் ஒரு விமானம் தீப்பிடித்து எரிந்ததால், பயணிகள் தப்பிக்கும் சறுக்கு பலகையைப் பயன்படுத்தி வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
ஏர் பூசன் விமானம் கிம்ஹே சர்வதேச விமான நிலையத்திலிருந்து ஹாங்காங்கிற்குச் செல்லத் தயாராக இருந்தபோது, அதன் பின்புற பாகங்கள் தீப்பிடித்து எரிந்ததாக அந்நாட்டு போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.
விமானத்தின் 169 பயணிகள், ஆறு பணியாளர்கள் மற்றும் ஒரு பொறியாளர் இருந்த நிலையில் அவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.
மூன்று பேர் சிறு காயங்களுக்கு ஆளானதாக தேசிய தீயணைப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்ட ஒரு மணி நேரத்திற்குப் பிறகு தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தீ விபத்துக்கான காரணம் இன்னும் தெரியவில்லை என்பதுடன் விசாரணைகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.
மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்



