5 தாய்லாந்து நாட்டவர் உட்பட 8 பிணைக்கைதிகளை விடுவித்த ஹமாஸ்

இஸ்ரேல் நாட்டிற்குள் ஹமாஸ் அமைப்பினர் கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 7ந்தேதி திடீரென புகுந்து தாக்குதல் நடத்தினர். இதில் 120க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
ஹமாஸ் அமைப்பினர் 250 பேரை பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்றனர். இதனால் ஹமாஸ்க்கு எதிராக போர் பிரகடனம் செய்த இஸ்ரேல், காசா மீது தாக்குதல் நடத்தியது.
சுமார் 45 நாட்கள் கழித்து இடைக்கால போர் நிறுத்தம் ஏற்பட்டு ஹமாஸ் அமைப்பினர் சுமார் 150 பிணைக்கைதிகளை விடுவித்தனர். அதற்குப் பதிலாக இஸ்ரேல் சிறையில் உள்ள பாலஸ்தீனர்கள் பலர் விடுவிக்கப்பட்டனர்.
அதன்பின் ஹமாஸ் அமைப்பினர் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாக, இஸ்ரேல் மீண்டும் தாக்குதலை தொடங்கியது. அதன்பின் ஒரு வருடத்திற்கு மேலாக தொடர்ந்து போர் நடைபெற்று வந்தது.
6 வாரம் இந்த போர் நிறுத்தம் அமலில் இருக்கும். அத்துடன் ஹமாஸ்- இஸ்ரேல் இடையே பிணைக்கைதிகள் மற்றும் பாலஸ்தீனர்கள் இஸ்ரேல் சிறையில் இருந்து விடுதலை செய்யவும் ஒப்பந்தம் ஏற்பட்டது.
அதன் அடிப்படையில் ஹமாஸ் அமைப்பினர் முதற்கட்டமாக 3 பேரையும், 2வது கட்டமாக 4 பேரையும் விடுதலை செய்தது. இந்த நிலையில் இன்று 3வது கட்டமாக பிணைக்கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டவர்களில் 8 பேரை விடுவித்துள்ளது.
இதில் 20 வயது ஆகம் பெர்கர் என்ற பெண் ராணுவ வீரர் ஆவார். இவரை இன்று முன்னதாகவே விடுவித்தது.
அதன்பின் 29 வயது அர்பெல் யெஹூத் , 80 வயது முதியவர் மற்றும் தாய்லாந்தை சேர்ந்த ஐந்து பேர் என மொத்தம் 8 பேரை விடுவித்தது.
பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.
மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்



