மியான்மரில் மேலும் 6 மாதங்களுக்கு அவசர நிலை நீட்டிப்பு

மியான்மரில் கடந்த 2021ம் ஆண்டு பிப்ரவரி 1ம் தேதி ஆட்சி அதிகாரத்தை ராணுவம் கைப்பற்றியது. பொது தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாகக் கூறி ராணுவ ஆட்சி அமல்படுத்தப்பட்டது.
அந்நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
அப்போது 2023, ஆகஸ்டு மாதம் பொதுத்தேர்தல் நடத்தப்படும் என ராணுவம் உறுதியளித்தது. தொடர்ந்து அவசர நிலையை நீட்டித்து வருவதால் பொதுத்தேர்தலையும் ஒத்தி வைத்தது.
இந்நிலையில், மியான்மர் நாட்டில் மேலும் 6 மாத காலத்துக்கு அவசர நிலை நீட்டிக்கப்படுகிறது என அந்நாட்டு ராணுவம் அறிவித்துள்ளது. தொடர்ந்து 5 ஆண்டாக அவசர நிலை நீட்டிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.
மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்



