வான் கோழி மிளகு வறுவல் - செய்முறை!

#SriLanka #Cooking
Dhushanthini K
2 months ago
வான் கோழி  மிளகு வறுவல் - செய்முறை!

பொருள் - அளவு

 வான் கோழி இறைச்சி கால் கிலோ 

 பெரிய வெங்காயம் -2

 தக்காளி - 2 

 இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன் 

 மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்

 மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன் 

 மல்லித் தூள் - 1 டேபிள் ஸ்பூன்

 மிளகுத் தூள் - 6 டீஸ்பூன்

 எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன்

 பட்டை 3 

 ஏலக்காய் -3 

 கிராம்பு -3 

 பிரியாணி இலை -1 

 சோம்பு - 1 டீஸ்பூன்

 கறிவேப்பிலை - 1 கொத்து

 செய்முறை : வெங்காயம், தக்காளியை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். இறைச்சியை சுத்தம் செய்து அதனுடன் உப்பு, மஞ்சள்தூள், மிளகாய் தூள், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பிரட்டி 30 நிமிடங்கள் ஊற வைக்கவும். பிறகு ஒரு கடாயில் எண்ணெய் விட்டு சோம்பு, பட்டை, கிராம்பு, கறிவேப்பிலை, பிரியாணி இலை சேர்த்து தாளிக்கவும். பின் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். 

பின் இஞ்சி பூண்டு பேஸ்ட் மற்றும் தக்காளி சேர்த்து வதக்கவும். வதங்கியதும் அதில் மல்லித்தூள் சேர்த்து வதக்கி தண்ணீர் கொஞ்சம் சேர்த்து கொதி வந்தவுடன் ஊறிய சிக்கனை சேர்த்து 10 நிமிடம் மிதமான தீயில் வைக்க வேண்டும். கறி வெந்ததும் அதில் மிளகு தூள், எலுமிச்சை சாறு சேர்த்து பிரட்டி கொத்தமல்லி தூவி இறக்கவும். இப்போது சுவையான மிளகு வான் கோழி வறுவல் தயார்.


பொதுமக்களுடைய நன்மை கருதி 
லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.

மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!