கடுமையான வெள்ள பாதிப்பை எதிர்கொண்டுள்ள ஆஸ்திரேலியா : ஒருவர் பலி, பலர் இடப்பெயர்வு!
#Australia
#Flood
Dhushanthini K
2 months ago

ஆஸ்திரேலியாவின் பல பகுதிகளில் வெள்ளம் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வெள்ளம் காரணமாக இதுவரை ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
நாட்டில் சுமார் 1,700 வீடுகள் நீரில் மூழ்கியுள்ளதாகவும், ஆறு புறநகர்ப் பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறுமாறு கூறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.
மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்



