ஜனநாயகத்தை வலுப்படுத்துவது அனைவரினதும் பொறுப்பாகும் - சஜித்!
#SriLanka
#Sajith Premadasa
Thamilini
11 months ago
சுதந்திரத்திலிருந்து நாம் பெற்ற ஜனநாயகத்தை வலுப்படுத்துவது இந்த தருணத்தில் நம் அனைவரின் பொறுப்பாகும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு வாழ்த்துச் செய்தியை வெளியிட்ட எதிர்க்கட்சித் தலைவர், இதற்காக, நிகழ்காலத்தை துல்லியமாக விளக்கி, இன, மத குறுகிய மனப்பான்மையைக் கடந்து ஒன்றுபடுவதற்கான உறுதியை சுதந்திர தினத்தன்று எடுக்க வேண்டும் என்று சுட்டிக்காட்டினார்.
இதேவேளை மக்கள் உண்மையான சுதந்திரத்தை அனுபவிக்க வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று அஸ்கிரிய பீடத்தின் அனுநாயக்கர் வணக்கத்திற்குரிய வெடருவே ஸ்ரீ உபாலி தேரர் தெரிவித்தார்.
பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.
மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்