வெந்தய குழம்பு - செய்முறை விளக்கம்!

தேவையான பொருட்கள்:
சிறிய வெங்காயம் - 20
பூண்டு - 6 பற்கள்
மிளகாய் வற்றல் - 5
சீரகம் - 3 தேக்கரண்டி
வெந்தயம் - 2 தேக்கரண்டி
மல்லி - 1 தேக்கரண்டி
மஞ்சள் பொடி - 1/2 தேக்கரண்டி
கடுகு - 1/2 தேக்கரண்டி
எண்ணெய் - 3 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை: வெங்காயத்தை உரித்து நறுக்கிக் கொள்ளவும். பூண்டினை தோல் உரித்துக் கொள்ளவும். மிளகாய் வற்றல், சீரகம், மல்லி ஆகியவற்றை ஒன்றாய் அரைத்துக் கொள்ளவும். புளியை சிறிது நீரில் ஊற வைத்து, சற்று நேரத்திற்கு பின் அதனைக் கரைத்து அதனுடன் அரைத்த மசாலாவினையும், மஞ்சள் பொடி மற்றும் தேவையான உப்பு சேர்த்துக் கலக்கிக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி, கடுகு மற்றும் நுணுக்கிய வெந்தயம் போட்டுத் தாளிக்கவும். பிறகு அதில் நறுக்கிய வெங்காயம் மற்றும் பூண்டினைப் போட்டு வதக்கவும். பிறகு அதில் மசாலா கரைத்த புளித் தண்ணீரை ஊற்றிக் கொதிக்க விடவும். குழம்பு நன்கு கொதித்து வற்றியவுடன் சிறு தீயில் சிறிது நேரம் வைத்திருந்து எண்ணெய் தெளிந்தவுடன் இறக்கி பரிமாறவும்.
பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.
மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்



