இந்தோனீசியாவில் ஓரினச்சேர்க்கை விருந்தில் பங்கேற்ற 56 பேர் கைது

#Arrest #Indonesia
Prasu
2 months ago
இந்தோனீசியாவில் ஓரினச்சேர்க்கை விருந்தில் பங்கேற்ற 56 பேர் கைது

ஓரினச் சேர்க்கை விருந்து நிகழ்வில் திரண்ட 56 ஆண்களை இந்தோனீசியக் காவல்துறையினர் கைதுசெய்தனர்.

தலைநகர் ஜகார்த்தாவிலுள்ள சௌத் ஜகார்த்தா ஹோட்டலில் அவர்கள் கைதுசெய்யப்பட்டதாக காவல்துறைப் பேச்சாளர் ஏட் ஏரி சயம் இந்திராடி தெரிவித்தார்.

நிகழ்விடத்திலிருந்து ஆணுறைகளும் எச்ஐவி தொற்றுத் தடுப்பு மருந்துகளும் கைப்பற்றப்பட்டதாகவும் அவர் கூறினார். கைதுசெய்யப்பட்டோரில் மூவர்மீது அந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 

அவர்கள்மீதான குற்றம் உறுதிப்படுத்தப்பட்டால் 15 ஆண்டுகள்வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம். ஜகார்த்தா உட்பட இந்தோனீசியாவின் பெரும்பாலான பகுதிகளில் ஓரினச்சேர்க்கை சட்டவிரோதமானதன்று.

அதே நேரத்தில், முஸ்லிம்களைப் பெரும்பான்மையினராகக் கொண்ட அந்நாட்டில் அச்செய்கை சமூகக் கட்டுக்கு எதிரானதாகக் கருதப்படுகிறது.

கடந்த 2020ஆம் ஆண்டு பியூ ஆய்வு நிலையம் நடத்திய கருத்தாய்வில் பங்கேற்ற இந்தோனீசியர்களில் 80 சதவீதமானோர் ‘ஓரினச் சேர்க்கையை சமூகம் ஏற்றுக்கொள்ளக்கூடாது’ என நம்புவதாகத் தெரிவித்திருந்தனர்.

பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.

மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!