ஸ்வீடனில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 11 பேர் உயிரிழப்பு!

ஸ்வீடனில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 11 பேர் உயிரிழந்தனர்.
தலைநகர் ஸ்டாக்ஹோமின் மேற்கே உள்ள ஓரிப்ரோ ரைஸ்போர்க்ஸ்காவில் உள்ள உயர்கல்வி நிறுவனத்தில் துப்பாக்கிச் சூடு நடந்ததாக கூறப்படுகிறது.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஸ்வீடிஷ் வரலாற்றில் மிக மோசமான வெகுஜன துப்பாக்கிச் சூடு இது என்று என்று பிரதமர் உல்ஃப் கிறிஸ்டியன்சன் கூறியுள்ளார்.
இறந்தவர்களில் துப்பாக்கிச் சூடு நடத்தியவரும் அடங்குவதாகக் கூறப்படுகிறது.
இந்த துப்பாக்கிச் சூட்டில் சந்தேக நபர் பயன்படுத்திய துப்பாக்கி வகை மற்றும் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட விதம் குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை என்று வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.
மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்



