ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்திலிருந்து விலகிய அமெரிக்கா
கடந்த ஜனவரி 20 ஆம் தேதி அமெரிக்க அதிபராக பதவியேற்றுள்ள டொனால்டு டிரம்ப் பல்வேறு அதிரடி முடிவுகளை எடுத்து வருகிறார்.
முன்னதாக ஜெனீவா காலநிலை மாற்ற ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகுவதாக அறிவித்தார். பல்வேறு வளரும், பின்தங்கிய நாடுகளுக்கு அமெரிக்கா அளித்து வந்த யுஎன்- எய்ட் நிதியை நிறுத்தினார்.
இந்நிலையில் மனித உரிமைகள் கவுன்சில் (UNHRC) உட்பட ஐக்கிய நாடுகள் (ஐநா) சபையின் பல்வேறு அமைப்புகளிலிருந்து அமெரிக்கா விலகுவதாக டிரம்ப் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பான நிர்வாக உத்தரவில் நேற்று அவர் கையெழுத்திட்டார். மேலும் பாலஸ்தீனியர்களுக்கான ஐ.நா. நிவாரண அமைப்பு (UNRWA) நிதியையும் அமெரிக்கா நிறுத்தியுள்ளது.
ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு (UNESCO) செய்லபாடுகள் குறித்த மறுஆய்வுக்கும் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
இந்த ஐ.நா. அமைப்புகளுக்குள் "அமெரிக்க எதிர்ப்பு" இருப்பதாக கருதப்படுவதனால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என வெள்ளை மாளிகை செயலாளர் வில் ஷார்ஃப் தெரிவித்துள்ளார்.
பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.
மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்