லொள்ளு சபா நடிகர் சிரிக்கோ உதயாவின் கால் அகற்றம்
#Actor
#TamilCinema
#Surgery
Prasu
4 days ago

‘லொள்ளு சபா’ நடிகர் சிரிக்கோ உதயாவுக்கு சர்க்கரை வியாதியால் அறுவை சிகிச்சை மூலம் கால் அகற்றப்பட்டுள்ளது.
விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘லொள்ளு சபா’ காமெடி நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நடிகர் சிரிக்கோ உதயா.
பல படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். மேலும் சந்தானத்துக்கு காமெடி வசனங்களையும் எழுதி கொடுத்துள்ளார். இதை தாண்டி, இசைத்துறையில் வயலின் வாசித்துள்ளார்.
பல சின்னத்திரை நிகழ்ச்சிகளில் மிமிக்கிரி செய்து அசத்துவது என பல திறமைகளை கொண்டவர் சிரிக்கோ உதயா.
பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.
மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்



