கேரட் பொரியல் - செய்முறை விளக்கம்!

#SriLanka #Cooking
Dhushanthini K
1 month ago
கேரட் பொரியல் - செய்முறை விளக்கம்!

தேவையான பொருட்கள் 

 கேரட் - 1/4 கிலோ.

 உப்பு - 1/2 தேக்கரண்டி.

 தாளிக்க தேவையான பொருட்கள் :

 எண்ணெய் - தேவைக்கேற்ப

 கடுகு - தேவைக்கேற்ப

 சீரகம் - 1/2 தேக்கரண்டி

 காய்ந்த மிளகாய் - 2

 உளுத்தம் பருப்பு - 1/2 தேக்கரண்டி

 கடலைப்பருப்பு - 1 தேக்கரண்டி

 வெங்காயம் - 1/2 பாகம்

 கறிவேப்பிலை - தேவைக்கேற்ப

 பச்சை மிளகாய் - 2

 கொத்தமல்லி தழை - தேவைக்கேற்ப

 தேங்காய் துருவல் - 3 மேசைக்கரண்டி

 செய்முறை விளக்கம் 

 முதலில் கடலைப்பருப்பை ஊற வைக்க வேண்டும்.கேரட்டை பொடியாக நறுக்கி அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி வேக வைக்க வேண்டும்.தேவையான உப்பு சேர்த்து கலந்துவிட்டு மூடிபோட்டு வேகவிடவும். கேரட் வெந்ததும் அதிலேயே தண்ணீரை சுண்ட விட்டு இறக்கவும்.(தண்ணீரை வடித்தால் அதில் உள்ள சத்து போய் விடும்). பின் கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, காய்ந்த மிளகாய், உளுத்தம் பருப்பு, ஊறிய கடலை பருப்பு போட்டு தாளித்து அரை வெங்காயத்தை பொடியாக அரிந்து போட்டு கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்க வேண்டும். அதன் பின் வேக வைத்துள்ள கேரட், பச்சை மிளகாய் பொடியாக நறுக்கி போட்டு, தேங்காய் துருவலும் சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கி கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.இப்போது சுவையான கேரட் பொரியல் தயார்.


பொதுமக்களுடைய நன்மை கருதி 
லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.

மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!