பூசணிக்காய் அல்வா!

#SriLanka #Cooking
Dhushanthini K
1 month ago
பூசணிக்காய் அல்வா!

தேவையான பொருட்கள் :

  பூசணிக்காய் - கால் கிலோ

 சர்க்கரை - அரை கிலோ

 பால் - கால் லிட்டர்

 நெய் - 100 மி.லி

 முந்திரி - 6

 ஏலக்காய் - 3 (பொடியாக்கியது)

 செய்முறை : பூசணிக்காயைத் தோல் சீவித் துருவிக் கொள்ளவும். முந்திரியை உடைத்து இரண்டு ஸ்பூன் நெய் விட்டு பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி அடுப்பில் வைக்கவும். பால் நன்கு கொதிக்கும்போது பூசணிக்காயைப் போட்டு மூடி வேக வைக்க வேண்டும்.

 பூசணிக்காய் பாதி வேகும் போது மெதுவாக கிளறிவிடவும். நன்றாக வெந்து குழைந்து வரும்போது தேவையான அளவிற்கு சர்க்கரையை போட்டு நன்கு கலக்கி விடவும். சர்க்கரையை போட்டதும் அடிப்பிடித்துக் கொள்ளாதவாறு அடிக்கடி கிளறிக் கொண்டே இருக்கவும். பின்னர் நெய்யைச் சிறிது சிறிதாக ஊற்றி கிளற வேண்டும். அதனுடன் வறுத்த முந்தரியை போட்டுக் கிளறவும். சுவையான அல்வா ரெடி.

பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.

மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்

images/content-image/1740469779.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!