தேங்காய் சாக்லேட் லட்டு. - செய்முறை விளக்கம்!

தேவையான பொருட்கள்
தேங்காய் 1/4 கப் துருவியது
கோவா 2 டேபிள் ஸ்பூன்
கரகரப்பாக உடைத்த நட்ஸ் 200 கிராம்
சர்க்கரை 50 மில்லி
சாக்லேட் சிரப் 1 ஸ்பூன்
கோகோ தூள் 3 டேபிள் ஸ்பூன்
காய்ச்சி ஆறவைத்த பால் 6 டேபிள் ஸ்பூன்
நெய் சமையல் குறிப்புகள் 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை
நெய் விட்டு சூடானதும் தேங்காய் துருவல் சேர்த்து வதக்கவும் பாலில் கோகோ தூள் சேர்த்து கட்டியில்லாமல் கரைத்து ஊற்றவும் பின் துருவிய கோவா சேர்த்து கிளறவும் பின் சர்க்கரை சேர்த்து நன்கு கிளறவும் சர்க்கரை கரைய இளகி பின் கெட்டியாகும்
பின் சாக்லேட் சாஸ் சேர்த்து கூட கரகரப்பாக உடைத்த நட்ஸ் சேர்த்து மீதமுள்ள நெய்யை சிறிது சிறிதாக சேர்த்து நன்கு கிளறவும் பாத்திரத்தில் ஒட்டாமல் திரண்டு வரும் போது இறக்கி ஆறவிடவும் பின் கைகளில் சிறிது நெய் தடவி கொண்டு உருண்டை பிடிக்கவும்
சுவையான ஆரோக்கியமான மணமான தேங்காய் சாக்லேட் பால்ஸ் ரெடி
இரண்டு நாட்கள் வரை பயன்படுத்தலாம்.
பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.
மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்



