ஜனாதிபதி அலுவலகத்திற்கு சொந்தமான சில வாகனங்களை ஏலத்தில் விற்பனை செய்ய தீர்மானம்!
#SriLanka
#vehicle
Dhushanthini K
2 months ago

ஜனாதிபதி அலுவலகத்திற்கு சொந்தமான சில வாகனங்கள் மற்றும் வாகன உறுதி பாகங்கள் என்பன ஏலத்திற்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் செலவுகளை குறைத்தல் மற்றும் நிதி பொறுப்புக்களை ஊக்குவிப்பதை நோக்கமாக கொண்டு பாவனையில் இருந்து நீக்கப்பட்ட வாகனங்கள் இவ்வாறு ஏலத்தில் விற்பனை செய்யப்படவுள்ளன.
இதற்கமைய 09 டிபெண்டர் ரக ஜீப்கள், வொல்வோ ரக ஜீப், கரயிஸ்லர் ரக வாகனம், மஹேந்திரா பொலெரோ வாகனம், ரோஸா பஸ், டிஸ்கவரி வாகனம் மற்றம் டொயாடோ மோட்டார் வாகனம் உள்ளடங்களாக 15 வாகனங்கள் ஏலத்தில் விற்பனை செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.
மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்



