பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவின் வேண்டுகோள்

#SriLanka #Temple #Tamil People #Archuna
Prasu
2 months ago
பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவின் வேண்டுகோள்

கடந்த சில நாட்களாக மீண்டும் ஒரு பிரச்சனையை தமிழ் மக்களிடம் திணிக்க சில தமிழ் அரசியல்வாதிகள் முனைவதை பலரும் பார்த்திருக்கலாம் .

ஹபரணை பிள்ளையார் கோயில் பொலன்னறுவை அநுராதபுர அரசர் கால வரலாற்றுடன் தொடர்புபட்ட  புராதனமான கோயில் இல்லை. அந்த பகுதியில் வணிக நோக்காக வந்த செட்டிகளால் அமைக்கப்பட்ட விநாயகர் ஆலயம் அது.  அவர்கள் மீண்டும் தமது பிரதேசங்கள் செல்லும்போது ஒரு சிங்களவரிடம் ஒப்படைத்துச்சென்றார்கள் .

அவர் மரணித்தபின் அவரின் மகனால் கோயிலின் பூசைகள் தொடரப்பட்டன . பின்பு அவரின் மகன் மதம் மாறியதாக தகவல் .அதனால் அவருக்கு கோயிலில் பூசைகள் தொடர முடியாது என்ற காரணத்தினால் கோயிலை கைவிட்டார்கள்.
இது அரசாங்கத்தால் திட்டமிட்டு அழிக்கப்பட்டது ஒன்றல்ல நமது கவனயீனத்தால் மறக்கப்பட்ட ஒன்று. அது தனியார் கோயில் என்பதால்  இதில் நாம் தலையிட முடியாது.

நேற்று சில பதிவுகளை பார்த்திருந்தேன் அவர்கள் வழக்கமாக வணங்கிச்செல்லும் ஒரு ஆலயம் என்று குறிப்பிட்டிருந்தார். நான் நினைக்கின்றேன் அவர் சில வருடங்களாக அங்கே செல்லவில்லை போல. கோயில் உடைக்கப்பட்டது கடந்த ஆண்டில். இத்தனை காலமும் இருந்து நேற்று இதனை எழுதியுள்ளார்கள்.

நிச்சயம் இது ஒரு அரசியல் நோக்கத்திற்காக எழுதப்பட்டது என்பதில் எந்தவித சந்தேகங்களும் இல்லை .
அத்துடன் வடக்கில் உள்ள விகாரையுடன் தொடர்புபடுத்த முயல்கின்றார்கள். மக்களே இப்படியானவர்களுடன் அவதானமாக செயற்படுங்கள். அந்த கோயில் பராமரிப்பற்று பாழடைந்து போகும் வரை யாருமே அதனை பார்க்கவில்லை.

இன்று பொங்கி எழுகின்றார்கள் . மீண்டும் அதையே கூறுகின்றேன் நாம் ஒரு மத வணக்கஸ்தலத்தை உருவாக்குகின்றோம் என்றால் அதை கால காலமாக மக்கள் பராமரிப்பார்களா என்று அறிந்து அமைக்கவேண்டும் .

அது இல்லாமல் போனால் இது தான் நிலை என்பதற்கு ஹபரணை கோயில் ஒரு உதாரணம். மக்கள் தெளிவுறவேண்டும் என்பதற்கு இந்த பதிவு. யாருடைய முகநூல் பக்கங்களின் பதிவுகளை பார்த்து நான் எழுதியவை இல்லை நேரடியாக கோயில் வளாகம் சென்று நான் எனது கமராவால் பிடித்த படங்களும். சம்பந்தப்பட்டவர்களுடன் கேட்டறிந்த விடையங்களுமே இவை.

முடிந்தால் இந்த காணியை வாங்கி கோயிலை மீழ் நீர்மாணம் செய்ய முடியும் அதற்கு யாரும்  முடிந்தால் முனையுங்கள். வீணாக இதனை அரசியல் ஆக்காதீர்கள்

பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.

மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்

images/content-image/1740900721.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!