எரிபொருள் நிரப்பு நிலையங்களை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு மாற்ற அரசாங்கம் முயற்சிக்கின்றதா?
#SriLanka
#Fuel
Dhushanthini K
2 months ago

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையங்களை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு மாற்ற அரசாங்கம் முயற்சிப்பதாக சந்தேகம் எழுந்துள்ளதாக இலங்கை பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதற்காக அரசாங்கம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக அதன் துணைத் தலைவர் குசும் சதநாயகே தெரிவித்தார்.
இதேவேளை, இன்று (03) காலை ஜனாதிபதி செயலகத்திற்குச் சென்று எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களின் 3 சதவீத கமிஷன் குறைப்பு தொடர்பான மகஜர் ஒன்றை கையளிக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.
மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்



