ஜீவன் தொண்டமான் உள்பட 10 பேருக்கு பிணை வழங்கிய நீதிமன்றம்‘!

முன்னாள் அமைச்சர் ஜீவன் தொண்டமானுக்கு எதிராக பெருந்தோட்ட நிறுவனத்தினரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று (03) நுவரெலியா மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது வழக்கு எதிர்வரும் ஆறாம் மாதம் ஒன்பதாம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், குறித்த வழக்கில் சந்தேகநபர்களாக ஜீவன் தொண்டமான் உட்பட 10 சந்தேக நபர்களின் பெயர்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில் அவர்களை தலா 5 லட்சம் பெறுமதியான இரண்டு சரீர பிணையில் செல்ல அனுமதித்து நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
கடந்த வருடம் களனிவெளி பெருந்தோட்ட யாக்கத்திற்கு உட்பட்ட பீட்ரூ தோட்ட தொழிற்சாலையில் அத்துமீறி நுழைந்ததாக ஜீவன் தொண்டமான் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.
மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்




