தந்தூரி சிக்கன் - செய்முறை விளக்கம்!

தேவையான பொருள்கள்
முழு கோழி - ஒன்று
பூண்டு - ஒன்று
இஞ்சி - 50 கிராம்
வெங்காயம் - ஒன்று
எலுமிச்சை சாறு - ஒரு மேசைக்கரண்டி
தயிர் - ஒரு கப்
மிளகாய் தூள் - மூன்று தேக்கரண்டி
மிளகு தூள் - ஒரு தேக்கரண்டி
கரம் மசாலா தூள் - ஒரு தேக்கரண்டி
சீரக தூள் - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
ரெட் கலர் பொடி - சிறிதளவு
செய்முறை
வெங்காயம், இஞ்சி பூண்டை அரைத்து தயிருடன் கலந்து கொள்ளவும். அதில் உப்பு சேர்த்து எல்லா தூள் வகைகளையும் கலந்து சிக்கனில் நன்கு தடவி வைக்கவும். சிக்கனில் மசாலா தடவி ஒரு மணி நேரம் ஊறிய பிறகு ஆலிவ் ஆயில் கால் கப் கலந்து மறுபடியும் மூன்று மணி நேரம் ஊற வைக்கவும். ஒரு நாள் முன்பு கூட ஊற வைக்கலாம். இப்போது BBQ செய்யவும், ஓவன் க்ரில்லிலும் வைக்கலாம். இரண்டு வசதியும் இல்லாதவர்கள் எண்ணெயில் பொரித்து சாப்பிடவும்.
பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.
மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்




