பாய் வீட்டு பிரியாணி மசாலா அரைக்கும் முறை!

#SriLanka #Cooking
Dhushanthini K
4 weeks ago
பாய் வீட்டு பிரியாணி மசாலா அரைக்கும் முறை!

இந்த பிரியாணி மசாலா செய்ய நமக்கு மூன்றே பொருள் தான் தேவை. அது பட்டை கிராம்பு ஏலக்காய் இவைகள் தான். இவற்றை வாங்கும் போதே தரமானதாக பார்த்து வாங்கிக் கொள்ளுங்கள். ஏலக்காயில் விதைகள் அதிகமாக இருப்பதாக வாங்க வேண்டும்.

அதே போல் பட்டையும் சாயம் பூசியது தற்போது விற்பனையில் உள்ளது. அதை வாங்கும் போதே சரி பார்த்து வாங்குங்கள். கிராம்பின் மேலே இருக்கும் கொம்பு போன்ற பகுதி உடையாமல் இருப்பதாக பார்த்து வாங்குங்கள். இவற்றையெல்லாம் தரமாக பார்த்து வாங்கினாலே சுவை பிரமாதமாக இருக்கும்.

மசாலா பொருட்களின் அளவு
கிராம்பு – 20 கிராம்,
ஏலக்காய் – 30, கிராம்
பட்டை 50 கிராம்.

இதில் முதலில் ஏலக்காவை போட்டு அத்துடன் ஒன்னரை ஸ்பூன் சர்க்கரை சேர்த்துக் கொள்ளுங்கள். இதை சேர்ப்பதன் மூலம் ஏலக்காய் நன்றாக அரைபடுவதுடன், சர்க்கரை சுவையுடன் சேர்க்கும் போது பிரியாணியும் நன்றாக இருக்கும். ஏலக்காவை நல்ல ஃபைன் பவுடராக அரைக்க வேண்டும்.

அடுத்ததாக பட்டையை சேர்க்க வேண்டும். பட்டையை நன்றாக தூள் செய்து சேர்த்துக் கொள்ளுங்கள். இத்துடன் கிராம்பையும் சேர்த்துக் கொள்ளுங்கள். இதை சேர்த்த பிறகு ஒரு ஸ்பூன் கல் உப்பை இதில் சேர்க்க வேண்டும். இப்போது அனைத்தையும் சேர்த்து நல்ல பைன் பேஸ்ட் ஆக அரைத்துக் கொள்ளுங்கள்.

அரைத்த இந்த மசாலாவை காற்று போகாத டப்பாவில் போட்டு வைக்க வேண்டும். டப்பாவில் வைக்கும் போது ஒரு பாலீத்தீன் கவரில் போட்டு அதை கட்டி அதன் பிறகு வையுங்கள். இப்படி வைத்து எடுப்பதனால் இதன் மனம் வெகு நாட்கள் வரை குறையாமல் இருக்கும். உப்பு சேர்த்து இருப்பதால் மசாலா சீக்கிரத்தில் கெட்டும் போகாது.

நீங்கள் ஒரு கிலோ அளவிற்கு பிரியாணி செய்வதாக இருந்தால் அரைத்த இந்த மசாலாவில் இருந்து இரண்டு ஸ்பூன் மட்டும் போட்டாலே போதும். வேறு எந்த வித மசாலாக்களையும் சேர்க்க வேண்டாம் சுவை அட்டகாசமாக இருக்கும் மனமும் ஆளை தூக்கும்.

அதுமட்டுமின்றி இந்த மசாலாவை மற்ற அசைவ வகைகள் சமைக்கும் போதும் சேர்த்து சபைக்கு எல்லாம் அதேபோல் சைவ குருமா வறுவல்கள் செய்யும் பொழுது இதை சேர்த்தால் சுவை அட்டகாசமாக இருக்கும். அளவு மட்டும் கால் ஸ்பூன் அல்லது அரை ஸ்பூனுக்கு மேல் சேர்க்க வேண்டாம்.

பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.

மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்

images/content-image/1741095961.jpg


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!