உங்கள் பெயரை கூட்டினால் கூட்டு எண் 21 வருகிறதா? இது உங்களுக்கான பதிவு

#people #Lanka4 #Numerology
Prasu
4 weeks ago
உங்கள் பெயரை கூட்டினால் கூட்டு எண் 21 வருகிறதா? இது உங்களுக்கான பதிவு

அஷ்ட லக்ஷ்மியின் ரூபங்களில் வீர லக்ஷ்மியின் கடாட்சம் கொண்டது .பிரபஞ்சத்தின் சித்திரமாகவும் மகரிஷிகளின் மகுடமாகவும் இந்த எண் விளங்குகிறது என எகிப்திய சித்திரங்கள் விளக்குகிறது.

"ஸர்வ வசீகரம் " "அளவு கடந்த ஆனந்தம் " என்று மந்திர நூல்களில் இந்த 21 எண் பற்றி விளக்கப்பட்டுள்ளது . சந்திரன் என்ற 2 ம் எண்ணும் சூரியன் என்ற 1 ம் எண்ணும் சேர்ந்து குரு பகவானின் 3 ம் எண்ணை தரும் இந்த 21 ம் எண்ணை பெயரில் பெற்றவர்கள் லஷ்மி கடாட்சம் பெற்றவர்கள் என்று கூட சொல்லலாம்.

பெரிய அறிவாளி என பெயர் கிட்டும். பொருளும்  கௌரவமும் பெருகி வரும் . பந்துக்களின் ஆதரவும், தனம், தானியம், மாடு, மனை இவை போன்ற சகல் சம்பத்துக்களும் கிடைக்கும் .

"அமாவாசை யோகம் " பெற்ற எண் என்பதால் புகழ், ஆனந்தம், அதிர்ஷ்டம் போன்றவை இந்த எண்ணிற்கு கட்டாயம் உண்டு. சாதாரண மனிதர்களும் உயர்வான நிலையை பெறுதல். கூட்டு வியாபார வெற்றி போன்றவைகளை தரும்.

தனது சந்தோஷத்திலும் லாபத்திலுமே கவனம் செலுத்தி ஊக்கத்துடன் உயர்வான நிலையை பெறுவார்கள். முன் வாழ்வில் சோதனைகள் இருந்தாலும் பின் வாழ்வில் மிகுந்த வெற்றியும் சந்தோஷமும் நிரந்தரமான பதவிகளும் உண்டு.

இந்த 21 எண்ணில் 2என்ற சந்திரன் முன்னே வரவதும் பின் 1 என்ற சூரியன் அடுத்து வருவதால் முன் வாழ்வு தேய்பிறை, வளர்பிறை பிறை போல் இருந்தாலும் வியாபார நிறுவனங்கள் ஆரம்பத்தில் லாப நஷ்டங்களை ஆரம்பத்தில் பிரதி பலித்தாலும் வலிமையான செங்கோலை அடுத்து நிற்கும் 1 ம் வழங்கி விடுகிறது .

பிறந்த தேதி 6- 15 - 24 க  வருபவர்களும்  பிறந்த தேதியின் கூட்டு எண் பிறந்த தேதியின் பிரமிடு எண் 6 க வருபவர்களும் இந்த 21 எண்ணில் பெயர்  வைத்து கொண்டாலும் பெயரின் ஹீப்ரு பிரமிடு எண் இந்த 21 ம் எண்ணில் இருந்தாலும் கெடுதலான தீமையான பலன்கள் ஏற்படும்.

பிறந்த தேதிக்கு ஏற்றாற்போல் இந்த 21 ம் எண்ணில் பெயரை  அமைத்து கொண்டால் அனைத்து வகையிலும் அதிஷ்டகரமான வாழ்க்கை அமையும்.

பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.

மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்

images/content-image/1741114039.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!