ஒரு தொகை போதைப் பொருட்களுடன் நாட்டிற்குள் நுழைய முற்பட்ட நபர் கைது!

குஷ் போதைப்பொருள் தொகையுடன் நாட்டிற்குள் நுழைய முயன்ற வெளிநாட்டு விமானப் பயணி ஒருவர் இன்று (05) காலை கட்டுநாயக்க விமான நிலைய வளாகத்தில் கைது செய்யப்பட்டார்.
தாய்லாந்தின் பாங்காக்கிலிருந்து கட்டுநாயக்கவிற்கு வந்த 34 வயதுடைய தாய்லாந்து நாட்டவர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
வருகை முனையத்தில் சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்த.
அவரிடம் இருந்து 5 கிலோ 200 கிராம் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு சுமார் ரூ.52 மில்லியன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளுக்காக சந்தேக நபர் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.
மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்




