வத்தளையில் மனித நுகர்வுக்கு தகுதியற்ற கோதுமை மா கண்டுப்பிடிப்பு!

வத்தளை பகுதியில் மனித நுகர்வுக்கு தகுதியற்ற ஒரு தொகை கோதுமைமா கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
புறக்கோட்டை பகுதியில் நடத்தப்பட்ட சோதனையின் போது கிடைத்த தகவல்களின் அடிப்படையில், குறித்த கோதுமை மா கையிருப்பு கண்டுபிடிக்கப்பட்டதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.
சம்பந்தப்பட்ட மாவுகளின் உற்பத்தி தேதிகள் கடந்த ஆண்டு மார்ச் மற்றும் மே மாதங்களாகவும், காலாவதி தேதிகள் இந்த ஆண்டு மார்ச் மற்றும் மே மாதங்களாகவும் குறிப்பிடப்பட்டிருந்ததாகவும், அவை பூச்சிகளால் அதிகமாக பாதிக்கப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.
அதன்படி, சம்பந்தப்பட்ட பொருட்கள் நுகர்வோர் விவகார அதிகாரசபை அதிகாரிகளின் காவலில் எடுத்து மேலும் விசாரணைகள் நடத்தப்படும்.
பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.
மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்




