மட்டக்களப்பிலும் தலைத்தூக்கியுள்ள வாள்வெட்டு கலாச்சாரம் : முளையிலேயே கிள்ளியெறிய வேண்டும்!

மட்டக்களப்பில் வாள்வெட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், சமூகத்தை குழப்பும் பல்வேறு செயற்பாடுகள் இடம்பெற்றுவருவதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் நேற்று (06) நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல்கள் அமைச்சு மற்றும் கடற்றொழில், நீரியல் வளங்கள் மற்றும் கடல் வளங்கள் அமைச்சு மீதான குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
யாழ்ப்பாணத்தில் ஆவா குழுவென்று அழைக்கப்படும் குழுவை உருவாக்கியவர்கள் தற்போது மட்டக்களப்பிலும் வாள்வெட்டு கலாச்சாரத்தை உருவாக்கி வருவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இதனால் இவற்றை முளையிலேயே கிள்ளியெறிய வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.
மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்



