இலங்கையை கவர்ச்சிகரமான சுற்றுலா தலமாக மாற்றுவது குறித்து ஜனாதிபதி ஆலோசனை!

பாரம்பரிய கட்டுமானத்திற்கு அப்பாற்பட்ட முறையான நகர திட்டமிடல் மூலம் இலங்கையை ஒரு கவர்ச்சிகரமான சுற்றுலா தலமாக மாற்ற முடியும் என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க கூறுகிறார்.
தேசிய பௌதீக திட்டமிடல் திணைக்கள அதிகாரிகளுடன் நேற்று (05) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்ட போதே ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க இதனைத் தெரிவித்தார்.
நகர மேம்பாட்டுத் திட்டங்களை செயல்படுத்தும்போது இலங்கையின் அடையாளத்தை பிரதிபலிக்கும் வகையில் தயாரிக்குமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
கிராமப்புற பொருளாதாரத்தில் கவனம் செலுத்துவதன் மூலம் நகரங்களை மட்டுமல்ல, கிராமங்களையும் அபிவிருத்தி செய்து நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கான அரசாங்கத்தின் திட்டம் குறித்து இங்கு விரிவாக விவாதிக்கப்பட்டது.
மேலும் அந்த வளர்ச்சி செயல்பாட்டில் கிராமப்புற கலாச்சாரம் மற்றும் மக்களின் வாழ்க்கையின் அடையாளத்தைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை ஜனாதிபதி வலியுறுத்தினார்.
பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.
மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்



